a

ஆம்பள வருது, ஐ வரல! : இதுதாங்க பொங்கலோட நெட் ரிசல்ட்டாம் .. !!

கோடிகளை கொட்டி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் கடைசியில் தெருக்கோடியில் இருக்கும் டீக்கடையில் தான் சாயா குடிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

இந்த யதார்த்தமான உண்மை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட ஐ படத்துக்கு சுமார் 100 கோடி வரை செலவு செய்து விட்டு தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே ஐ படம் பொங்கல் வெளியீடு என்று பேப்பர்களில் விடாமல் விளம்பரத்தை கொடுத்து வருகிறார். எல்லாம் ஐ படம் பொங்கலுக்கு வராது என்கிற எதிர்மறை செய்திகள் வெளியானது தான் காரணம்.

இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு சென்சார் வேறு யு / ஏ கொடுத்து விட்டதால் தமிழக அரசின் வரிச்சலுகையில் வெட்டு விழும். அப்படி விழுந்தால் அவர் தலையில் துண்டு விழுவது கன்பார்ம்.


இதனாலேயே படத்தை மேல் சென்சாருக்காக ரிவைசிங் கமிட்டிக்கு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களோ எப்போது மூடு வருமோ அப்போது தான் படத்தைப் பார்த்து சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள்.

ரிலீஸ் தேதிக்கு இன்னும் இன்னும் ஒரு வாரமே பாக்கி உள்ள நிலையில் இன்றுவரை கைக்கு சர்ட்டிபிகேட் வந்து சேரவில்லை. ஆக பொங்கலுக்கு ஐ வரும் .., ஆனா வராது என்கிற தள்ளாட்டத்தில் தான் நின்று கொண்டிருக்கிறது. அனேகமாக 14-ஆம் தேதிக்குப் பதிலாக 16-ஆம் தேதி ரிலீசாகும் என்று புதிய தகவலை வேறு கோடம்பாக்கத்தில் கசிய விட்டிருக்கிறார்கள்.

'ஐ' படம் படத்துக்கு இது ஒரு பெரிய சிக்கலாக நீடித்தாலும், விஷாலின் 'ஆம்பள' படத்துக்கு இந்த தொந்தரவே இல்லை. படத்துக்கும் இன்று க்ளீன் 'யு' சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார்கள். பொங்கல் ரிலீசும் கன்பார்ம் ஆகி விட்டது.

ஆக நாம் "நடக்குற கூத்தையெல்லாம் பார்த்தா பொங்கலுக்கு ஆம்பள மட்டும் தான் வருவார் போல ..." என்று முன்பு ஒரு செய்தியில் சொல்லியிருந்தோம் அல்லவா? அது உண்மையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Previous
Next Post »
Thanks for your comment